கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் 6 அம்ச கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றி தர ஏ டி பி, சி ஐ டி யு, மற்றும் கூட்டமைப்பில் உள்ள தொழிற்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஏ டி பி செயலாளர் செந்தூர் பாண்டியன் தலைமையில் சி ஐ டி யு இஸ்மாயில் ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் சார்பாக நாதன் சிறப்புரையாற்றினார் இதனைத் தொடர்ந்து சி ஐ டி யூ சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.பரமசிவம் பேசுகையில் தமிழ்நாடு அரசு சாமானிய மக்களின் பொங்கல் திருநாள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறோம் என்று கூறுகிறது அதேபோல் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டாமா..? இவர்களுக்கு பொங்கல் பண்டிகை இல்லையா..? இவர்களுக்கு சொந்த பந்தங்கள் இல்லையா..? என்று அடுக்கடுக்கான கேள்விகளோடு ஆட்சி அமைந்த உடன் 90 நாட்களில் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தீர்களே வாக்குறுதி எங்கே போனது..? எப்படி மறந்தீர்கள்..? இந்தப் போராட்டம் தனி ஒருவருக்கோ தனி ஒரு அமைப்பு சார்ந்த போராட்டமும் அல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் தான் என்று குறிப்பிட்டார்.
மேலும் இக்கூட்டத்தில் ஏ டி பி தலைவர் முத்துக்குமார், பொருளாளர் சேகர், ஓய்வு பெற்றோர் நாதன், ஏகாசி, விஸ்வநாதன், பெருமாள், மோகன், துரை, பி எம் முருகன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
-M.சுரேஷ் குமார்.