கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம்,நெகமம் அருகேயுள்ள வடசித்தூர் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திவரும் பொதுப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்தும், கிணத்துக்கடவு வட்டார கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தேனீர்கடைகளில் இரட்டை குவளை,முடிவெட்ட மறுப்பது,ஆலயநுழைவு மறுப்பு போன்றவை நடைபெறுவதை கோயம்புத்தூர் மாவட்ட சமூகநீதி மற்றும் மனிதஉரிமைகள் காவல் பிரிவு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இன்று 26.02.2024 திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களிடம், வடசித்தூர் மனோகரன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடனடியாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்கள் சம்பவ இடத்தை நேரடியாக ஆய்வு செய்திட கிணத்துக்கடவு வட்டாட்சியர் அவர்களுக்கு மனுவை வழங்கி உத்தரவிட்டார்.
நடவடிக்கை எடுக்கப்படுமா???
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.