நாடாளுமன்ற தேர்தல்- புதிய புதிய வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கோவை மாவட்ட நிர்வாகம்…!!!

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மக்களவைத் தேர்தல். 2024 முன்னிட்டு முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம் 100%வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்களித்த மை வடிவிலான கை வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சூலூர், பட்டணம், சேலம் TO கொச்சின் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள VOLTAS நிறுவனத்தின் குடோனில் பணிபுரியும் பணியாளர்கள் காடுகுட்டை சாலையில் அமைந்துள்ள ‘ராஜா ஸ்பின்னிங் மில்லில் பணிபுரியும் தொழிலாளர்கள். ஸ்ரீ விஷ்ணு பெருமாள் ஸ்பின் யார்ன்” என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அரசூர் கிராமம், சங்கோதிபாளையத்தில் இயங்கிவரும் கிராப்ட்ஸ் மேன் தொழில் நிறுவன தொழிலாளர்களிடம் 100% வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேட்டுப்பாளையம், சிக்காரம் பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து காரமடை பிரதான சாலை வரை ஒண்ணிபாளையம் கிருஸ்தகிங் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெள்ளாதி ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மூலம் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 19.04.2024 நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 100% வாக்கினை செலுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய டி.ஷர்ட் மற்றும் தொப்பி அணிந்து அணிந்து நியாய விலை கடைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.


நல்லட்டிபாளையத்தில் விளிம்பு நிலை மக்களான நரிக்குறவர் வாழும் பகுதியில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வயதில் மூத்த குடிமக்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தவறாமல் வாக்கு பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பட்டணம் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் இராமலிங்க நகர் நியாய விலைக்கடையில் பொருட்கள் பெற வந்த ரேஷன் அட்டைதார்களிடம் 100% வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. செம்மாண்டம்பாளையம் கிராமம், சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் வடுகன் காளிபாளையம் குக்கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

சிங்காநல்லூர் அரவான் கோயில் திடலில் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் வாக்களிப்பதன்
முக்கியத்துவம் குறித்தும் தவறாமல் வாக்களிக்கவும் பொதுமக்களுக்கு
எடுத்துரைக்கப்பட்டது. ஆனைமலை வழியாக செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மகிழுந்து (Car) ஆகியவற்றில் ‘ஏப்ரல் 19,2024 பாராளுமன்ற பொது தேர்தலில் 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி ஸ்டிக்கர்கள் ஒட்டி தேர்தல்
விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இராமநாதபுரம் கிராமம், சிங்காநல்லூர் தொகுதிக்கு
உட்பட்ட ஸ்ரீபதி நகர் குடியிருப்பு பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிக்குமாறு வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கியும் அழைப்பிதழ்கள்
அளித்தும், வீடுகளின் முன்பாக சுவரொட்டிகள் ஒட்டியும் பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு செய்யப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 50% கீழ் வாக்குபதிவு உள்ள RS puram பகுதி DP road, Clock tower இல் 100% வாக்கு பதிவு விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாயிலாக நடைபெற்றது. சூலூர் கிராமத்தில் 100% வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு டி-ஷர்ட் வழங்கப்பட்டு, கையில் பதாகை ஏந்தியபடி பேரணி நடத்தப்பட்டது. குரும்பபாளையம் கிராமத்தில் LRT என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் 100% வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் மேற்படி நிறுவனத்தில் பணிபுரியும் 250 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். மேட்டுப்பாளையம், ஜடையம்பாளையம் கிராமத்தில் ஆலங்கொம்பு புதூரில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் 25 நபர்களைக் கொண்டு வருகின்ற மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிப்பினை செலுத்துவது குறித்து வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கவுண்டம்பாளையத்தில் ருத்ரா மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம்
தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 19.04.2024 நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 100% வாக்கினை செலுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் பணிபுரியும் நியாய விலை கடை விற்பனையாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய டி-ஷர்ட் மற்றும் தொப்பி அணிந்து அணிந்து நியாய விலை கடைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp