கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை முத்திரைத்தாள் ஸ்டாம்ப் பேப்பர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே ஸ்டாம்ப் பேப்பர் முத்திரைத்தாள் கிடைக்காமல் பொதுமக்கள் அதிக தொகை கொடுத்து பொள்ளாச்சி மற்றும் கோவையில் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
தேயிலை தொட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்திலே அல்லது அரசு அலுவலகங்களிலோ உறுதிமொழி கொடுப்பது முத்திரைத்தாள் நோட்டரி வக்கீல் மூலம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழோ பண பலனும் பெற முடியும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் வால்பாறையில் முத்திரைத்தாள் விற்பவர் ஒருவர் மட்டுமே அவரிடமே முத்திரைத்தாள் இல்லாததால் முத்திரைத்தாள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் முத்திரைத்தாளின் விலை உயரப் போகிறதா என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வால்பாறை பகுதியில் முத்திரைத்தாள் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் முத்திரைத்தாள் விற்பனையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம், வால்பாறை.