கோவை மாவட்டம் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதியில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஒருவர் காலில் படுகாயம் அடைந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த அரசு பேருந்தும், கேரளா மாநிலம் பெருந்தல்மண்ணு பகுதியில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த இருசக்கர வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்து காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காடம்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.