கோவை மாவட்டம், கோவை மதுக்கரை பகுதியை அடுத்து மரப்பாலம். இது கோவை நகரில் வெளிப்புறமாகவும் மற்றும் பாறைகள் நிறைந்து பகுதியாக உள்ளதால் இங்கு பெரும் அளவில் கல் குவாரிகள் உள்ளன. அங்கு அதிக அளவில் கல்குவாரியில் குழிகள் உபயோகத்தில் இல்லாத நிலையில் இருக்கின்றன மேலும் அங்குள்ள குலிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது, இந்நிலையில் வார்டு எண் 23 க்கு உட்பட்ட (மரப்பாலம்) என்ற பகுதியில் உள்ள கல் குழியில் பெரும்பான்மையான குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இத்தகைய குழிகள் தற்போது குப்பைகளை கொட்டும் இடமாக உள்ளது, இதில் பெரும்பான்மையான கழிவுகள் மற்றும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் நிரப்பப்படுகின்றன, இதனால் இது ஒரு கொசு உற்பத்தியாகும் பண்ணையாக மாறி வருகிறது. இதில் போடும் குப்பைகளும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கி போகாத வண்ணம் உள்ளது இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர், இதனால் சம்பந்தப்பட்ட துறை மற்றும் அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு ஒரு நல்ல தீர்வினை வழங்குமாறு அப்பகுதி மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜஸ்டின் ரஞ்சித்.