ஆட்டு வியாபாரியை கண்டித்து கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை காந்தி மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் G.பாபு தலைமை வகித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆர்ப்பாட்டத்தில் ஜம்புலிங்கபுரம், வைரவசாமி என்பவரிடம் காலங்கரைப்பட்டியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி கணேசன் என்பவர் 30 ஆடுகள் விலைபேசி வாங்கிச் சென்றுள்ளார். ஆடு வாங்கிய பணத்தை வைரவசாமியிடம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கணேசனிடம் பணத்தை கேட்கும் போதெல்லாம் தருகிறேன் என்றே கூறியுள்ளார். சுமார் 2 1\2 வருடங்களாககியும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் வைரவசாமி கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையை முறையிட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதை கண்டித்தும் அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளான மாவட்டச் செயலாளர் P.கரும்பன் கயத்தார் ஒன்றிய செயலாளர் K.பொன்னுச்சாமி, கோவில்பட்டி நகர செயலாளர் K.செந்தில் ஆறுமுகம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் G.சேதுராமலிங்கம், கயத்தார் ஒன்றிய துணைச் செயலாளர்
O.இராமலிங்கம், கயத்தார் ஒன்றிய பொருளாளர் ரஜினிமுருகன், தாலுகா குழு உறுப்பினர் அந்தோணியம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திருவேங்கடம் ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ் மற்றும் K.எட்டப்பன், A.K.கருப்பசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts