தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்தல்: 1500 கிலோ பறிமுதல்!


தூத்துக்குடி மாவட்டம், மறவன்மடம் ஊராட்சி பகுதியில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரேஷன் அரிசியை கடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரேஷன் அரிசி எங்கிருந்து சேகரிக்கப்பட்டது மற்றும் யாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts