அழிந்து வரும் விளையாட்டு மீண்டும் மக்கள் மத்தியில் நடை முறைக்கு வருமா…?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள நகராட்சி கால்பந்து விளையாட்டு மைதானம் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கிட்டத்தட்ட முப்பது வருடத்திற்கு மேலாக விளையாட்டு வீரர்கள் மிகவும் ஆர்வமாக ரசித்து விளையாடி மக்கள் மத்தியில் இடம் பிடித்த கால்பந்து விளையாட்டு மைதானம் இன்று மிகவும் தரமற்ற முறையில் உள்ளது. வால்பாறை வட்டார இளைஞர்கள் அவர்கள் பகுதியில் கால்பந்து விளையாட்டு மைதானம் இருந்தும் கால்பந்து விளையாட்டு அழிந்து விடுமோ என சோகத்தில் உள்ளனர்.

இந்த மைதானத்தில் விளையாடிய முன்னாள் விளையாட்டு வீரர்கள் நினைவாக இந்த விளையாட்டு மைதானத்தை சிறப்பித்து தரவேண்டும் என்றும் கால்பந்து விளையாட்டினை மீண்டும் துவக்குவதற்கு வால்பாறை நகராட்சி ஆணையர், ஆய்வாளர் மற்றும் வால்பாறை எம் எல் ஏ திரு.சுதாகர் அவர்களும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வால்பாறை கால்பந்து விளையாட்டு வீரர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts