
தூத்துக்குடி கலெக்டா் அலுவலக வளாகத்தில் வைத்து மீனவப் பெண்கள் புரட்சிப்படை இயக்கத்தின் சார்பில் டிலைட்டா. மற்றும் பெண்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டை குப்பம் கிராமத்தில் கோட்டை குப்பம் மீனவ மக்களுக்கும் தலித் மக்களுக்கும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னியரசு இருதரப்பினர் பிரச்சினையை கேட்காமல் தலித் மக்கள் மட்டும் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை மட்டும் அமைச்சர் வன்னியரசு தீர்த்து வைத்துள்ளார். மீனவ மக்களுக்கு இன்று வரை அங்கு நியாயம் கிடைக்கவில்லை. கடல் எங்கு உள்ளதோ அங்குதான் பைபர் படகு நிறுத்த முடியும் மற்ற இடத்தில் நிறுத்தினால் தொழில் செய்ய முடியாது ஆட்சியாளர்களே கொஞ்சம் சிந்திக்க வேண்டும் ஜேசிபி இயந்திரம் மூலம் பைபர் படகுகளை இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது அங்குள்ள ஆண்கள் பெண்கள் மீனவ மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீனவ பெண்கள் எழுச்சித்தமிழர் திருமாவளவனுக்கு கோரிக்கை வைக்கிறோம் நீங்கள் இரு தரப்பினரின் பிரச்சனையும் தீர்த்து வைக்க வேண்டும். விடுதலை சிறுத்தை கட்சியில் மீனவ மக்களும் பயணித்து வருகிறார்கள். மீனவ மக்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் ஆளும் அரசு மீனவ மக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகிறது முதலமைச்சர் விஜய் மீனவ மக்களின் பிரச்சினை உடனடியாக தீர்க்க வேண்டும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அங்கு சென்று பார்க்கவில்லை என்ன பிரச்சனை என்று இதுவரை மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சென்று மக்களை பார்க்கவில்லை.
ஆளும் வர்க்கம் ஆளும் கட்சி மீனவ மக்களை ஒதுக்கி வருகிறது. மீனவ மக்களை இதுவரை அமைச்சர் ஸ்ரீநாத் சந்திக்காததால் ஏன் நாம் வாக்களித்தோம் என்ற நிலைமை உருவாகிகிறது. இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று மீனவ பெண்கள் புரட்சிப் படை இயக்கத்தின் சார்பில் டிலைட்டா ரவி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.











