
கோவை:இந்தியன் வங்கி சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் சிறு குறு நடுத்தர தொழி்ல் நிறுவனங்களுக்கான (MSME )கடன் முகாம் – ரூ.1,300 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் இந்தியன் வங்கியின் கோவை கள பொது மேலாளர் அலுவலகம் சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் (MSME) சிறு குறு நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் முகாம் ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு இந்தியன் வங்கியின் சில்லரை வணிகம் & MSME பிரிவின் முதன்மை பொது மேலாளர் சுஜய் மாலிக் தலைமை தாங்கினார்.கோவை, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் நேரிலும் ,சேலம், தர்மபுரி, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மண்டல பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் வீடியோ கான்பரன்ஸ் (Video conference) மூலமாக தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதன்மை பொது மேலாளர் சுஜய் மாலிக், விவசாய, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), வணிகம் மற்றும் சில்லறை வங்கி சேவைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.1,300 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு குறு நடுத்தர தொழில் துறையின் பங்களிப்பு முக்கியமானதாக இருப்பதால், தொழில் முனைவோர்களுக்கு எளிய நடைமுறைகளின் மூலம் விரைவாக கடன் வழங்க இந்தியன் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
புதிய தொழில் தொடங்குவோர், பெண்கள் தொழில் முனைவோர், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், வணிகக் கடன் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும்,வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயன் வங்கி சேவைகளை இந்தியன் வங்கி வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.இந்த மெகா கடன் முகாம் மூலம் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு கடன் ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டதுடன், தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் இது ஊக்கமளிக்கும் என அவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.












