
கோவை: ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக, எட்டாம் ஆண்டு, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது உலக ரத்தக் கொடையாளர் தினத்தை கொண்டாடும் வகையில் அமைந்தது.. இதில் இருசக்கர வாகனத்தில் இரத்த தானம் வழங்குவது குறித்து பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆண்டு தோறும் உலக இரத்த கொடையாளர்கள் தினமான ஜூன் 14ம் தேதியில் இது குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்க பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, விழிப்புணர்வு பேரணியாக நடைபெற்றது. கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக துவங்கப்பட்டு, ரேஸ் கோர்ஸ், ஆர் எஸ் புரம் போன்ற கோவையின் முக்கிய சாலை வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி நிறைவாக செம்மொழிப் பூங்காவில் நிறைவு செய்தனர். இதன் துவக்க விழா நிகழ்ச்சியில், கோவை மாவட்ட போக்குவரத்து கூடுதல் துணை காவல் ஆணையர்
ரவிச்சந்திரன், மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மணி நாராயணன், ஒய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர்
மனுநீதி, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அஸ்யந்த்
ஜி டி நாயுடு அறக்கட்டளை சார்பாக சமூக ஆர்வலர் அஞ்சனகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இப்பேரணியை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய
ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் கோபிநாத் கூறியதாவது;
நாளுக்கு நாள் ரத்த தானத்தின் சேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ரத்தம் வேண்டும் என்று கேட்போரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆனால் ரத்த தானம் செய்ய முன்வரும் கொடையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் பல உயிரிழப்புகள் ரத்தம் கிடைக்காமல் ஏற்படுகின்றது. இதனை தடுக்கும் பொருட்டு, ஸ்ரீ அன்னை கரங்கள் அறக்கட்டளை சார்பாக கடந்த ஏழு வருடங்களாக, இரு சக்கர வாகன பேரணியானது, ரத்தக் கொடையாளர் தினமான, ஜூன் 14ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேரணி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இரத்தக்கொடையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எங்களின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.
இவ்விழாவில் ஸ்ரீ அன்னை கரங்கள் அறக்கட்டளை சார்பாக சுரேஷ், பிரகாஷ், மற்றும் மகளிர் அணி சார்பாக கயல்விழி, ஜோடி சார்லட், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.












