நடுவக்குறிச்சியில் செம்மண் அள்ளிய டிராக்டர்களை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ. வி.ஜி. சரவணன்!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, சாயர்புரம் பேரூராட்சிக்குட்பட்ட நடுவக்குறிச்சி பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செம்மண் அள்ளப்பட்டதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதையடுத்து, செம்மண் ஏற்றி சென்ற டிராக்டர்கள் மற்றும் விவசாய கிணற்றை மூடி மண் அள்ளப்பட்டதாக கூறப்படும் இடத்தை ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய அவர், விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts