
கோயம்புத்தூரின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ் (Sanbrix Properties), தனது ‘சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர்’ வளாகத்தை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ், கடந்த 14 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனமான திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவையின் முக்கிய வணிக மையமாக வளர்ந்து வரும் நவ இந்தியாபகுதியில், சுமார் 70,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய வணிக வளாகத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த புதிய வணிக மையத்தின் அறிமுகம் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் (M.D) ஜோசப் ஸ்டானி பேசுகையில், “வாக்குறுதி அளிப்பது மட்டுமல்ல, அதைச் துல்லியமாகச் செயல்படுத்திக் காட்டுவதுதான் சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் தனித்துவமான அடையாளம் ஆகும் என்றார். திட்டமிடல் முதல் கட்டுமானம் மற்றும் ஒப்படைப்பு வரை அனைத்து பணிகளும் எங்களது அனுபவமிக்க உள்கட்டமைப்பு குழுவினரால் நேரடியாக மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் திட்டங்களை எங்களால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிகிறது என கூறினார்.
நிறுவனத்தின் எதிர்கால இலக்குகள் குறித்துப் பேசிய சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (C.E.O) சௌமியா ராஜேஷ், “தற்போது எங்களது நிறுவனம் 5 லட்சம் சதுர அடிக்கும் மேற்பட்ட கட்டுமான பரப்பளவைக் கொண்ட பல்வேறு முக்கிய திட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது என்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, எங்களின் தொழில்நுட்ப திறன், உலகத்தரம் வாய்ந்த கட்டுமானம் மற்றும் காலத்திற்கேற்ற ஒப்படைப்பு ஆகியவற்றின் மூலம் கோயம்புத்தூரின் உட்கட்டமைப்பு மற்றும் வணிக வளர்ச்சியில் சான்பிரிக்ஸ் தொடர்ந்து முதன்மையாகப் பங்களித்து வருகிறது என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.












