தரமற்ற முறையில் எரியும் மின்விளக்கு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் வளாகத்தின் முன்பு உள்ள உயர்மின் கோபுர விளக்கு, காந்தி சிலை அருகாமையில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு, மார்க்கெட் பகுதியில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு, கலைக்கல்லூரி வளாகம் உள்ள உயர்மின் கோபுர விளக்கு மற்றும் வால்பாறை வட்டார பகுதிகளில் தெரு விளக்குகள் சரிவர எரிவது இல்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை நகராட்சி ஆணையர் மற்றும் ஆய்வாளரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் செல்ல  முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலைமை உருவாகி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு வால்பாறை வட்டார பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும் என வால்பாறை வட்டார வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts