
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலைய தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ரயில் நிலைய வளாகத்தில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு மரக்கன்றுகளை நட்டினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாடு முழுவதும் திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்திடவும் 2014ம் ஆண்டு பாரதப் பிரதமரால் தூய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.தூய்மைஇந்தியா திட்டத்தின் மூலம் கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு மரக்கன்றுகளை நட்டினர்.
இந்நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி ரயில் நிலைய மேலாளர் சங்கர் ராஜா தலைமை வகித்தார்.
எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன்,ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சங்கர பாண்டியன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் குருநாத் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி எஸ்.எஸ்.டி எம் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலைய வளாகத்தை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட்டினர்.
இதில்,சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் தங்கமுத்து நாடார், கல்லூரி பொருளாளர் கண்ணன்,உறுப்பினர் அருண்,சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன்,இந்தியா பசுமை இயக்க தலைவர் குமார்,கல்லூரி பேராசிரியர்கள் விஜயகோபாலன்,உள்பட ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.கல்லூரி பேராசிரியர் கற்குவேல் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.











