பொள்ளாச்சி கிளை சிறைச்சாலையில் 79வது சுதந்திர தின விழா!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி 79 ஆவது சுதந்திர தின விழா பொள்ளாச்சி கிளை சிறைச்சாலையில் நடைபெற்றது. விழாவில், கிளை சிறை கண்காணிப்பாளர் திரு.மாரிமுத்து அவர்கள் தேசியக் கொடியை  ஏற்றினார். பின்னர் சிறை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொள்ளாச்சி கிளை சிறைச்சாலையின் அலுவல் சாரா பார்வையாளர்கள் திரு. கமலக்கண்ணன், திரு.வெற்றிவேல் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சிறைச்சாலையின் முதன்மை தலைமை காவலர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, சிறைவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  சுதந்திரம் பெற்ற வரலாற்றையும் அதற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகளையும் நினைவு கூர்ந்து, பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்று கிளை சிறை கண்காணிப்பாளர் திரு.மாரிமுத்து அவர்கள் பேசினார்.

பொள்ளாச்சி கிளை சிறைச்சாலையின் அலுவல் சாரா பார்வையாளர்கள் திரு கமலக்கண்ணன், திரு வெற்றிவேல் ஆகியோர் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பது குறித்தும், சிறைச்சாலை என்பது தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளக்கூடிய இடமாக நினைத்து தங்களை சீர்படுத்தி கொள்ளுங்கள் என்று சிறைவாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் முதன்மை தலைமை காவலர் திரு.சார்லஸ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts