
தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் (22.08.2025) முதல் நடைபெறவிருக்கும் ஆறாவது புத்தக திருவிழா (தொடர்ந்து படி தூத்துக்குடி)யை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால் அவர்கள், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஐஸ்வர்யா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.ரேவதி ரமன், இ.வ.ப., அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மரு.மதன், இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைத்துறை) (பொ) திரு.சிவசுப்பிரமணியன், அவர்கள், உதவி ஆட்சியர் (கோவில்பட்டி) திரு. ஹீமான்ஷீ மங்கள், இ.ஆ.ப., அவர்கள் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.தி.புவனேஷ் ராம், இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.







