வால்பாறைக்கு வந்த சுற்றுலா வான் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள்  சுற்றிப் பார்த்துவிட்டு பொள்ளாச்சி செல்லும் போது அட்ட கட்டிக்கு கீழே முதல் கொண்டை ஊசி வளைவு அருகாமையில் வைத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து அதில் பயணம் செய்த 20 பேர் காயம் அடைந்தனர். நான்கு பேருக்கு பலத்த காயமும் சில பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

வால்பாறை சுற்றிப் பார்த்துவிட்டு செல்லும்பொழுது வளைவுகளில் கியர்களை மாற்றாமல் நான்காவது, ஐந்தாவது கியர் போட்டு  செல்வதனால் அதிக அளவு வாகனங்கள் சூடாகி பழுதாகி விடுகிறது. இதனால் பிரேக் பிடிக்காமல் அசம்பாவிதங்கள் ஏற்படும் அவல நிலை உருவாகி வருகிறது.

இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கு காரணம் வரும் சுற்றுலாப் பயணிகளின் ஓட்டுனர்கள் கவனக்குறைவாகும் என பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டுகிறது.

இதனால் நேற்று முன்தினம் மாலை ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts