
கோவை மாநகரம், D3 போத்தனூர் சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில், நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2026 அன்று காலை 08.50 மணியளவில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி காவல் ஆய்வாளர் திரு. பி. அசோக் குமார் தலைமையில் காவல் நிலைய வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் ஆய்வாளருக்கு காவலர்களால் காவல் காப்பு மரியாதை வழங்கப்பட்டு, பின்னர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடி நாட்டிற்கு மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் அவர்கள் காவலர்களிடம் உரையாற்றுகையில், நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், சுதந்திரத்தின் அருமையையும் எடுத்துரைத்தார். மேலும், காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சமூக அமைதியை நிலைநாட்டுவதில் ஆற்ற வேண்டிய முக்கியப் பொறுப்புகள் குறித்தும் அறிவுறுத்தினார்.

விழாவில் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், காவல்துறையைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
நாட்டின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தின் மாண்பையும் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தேசப்பற்று மற்றும் ஒற்றுமை உணர்வுடன் சிறப்பாக நிறைவு பெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.








