
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை பகுதியில் யானை கூட்டம் சுற்றி திரிகின்றன. அப்பகுதியில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் நேற்று இரவு 11 மணி அளவில் அவ்வழியாக வந்த யானை கூட்டங்கள் ரேஷன் அங்காடி கடையை உடைத்து பொருள்களை சேதப்படுத்தி சென்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் வனவிலங்கு அதிகாரிகளை வரவழைத்து யானைக் கூட்டங்களை அருகாமையில் உள்ள சோலைக்கு மிரட்டி விடப்பட்டது. பொது மக்களுக்கு கொடுக்க வேண்டிய ரேஷன் பொருள்களை சேதப்படுத்தி சென்றதால் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.







