அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!

தூத்துக்குடி: பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிற்காமல் சென்று செல்வதாகவும், இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சங்கரலிங்கபுரம் அருகே உள்ள வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தான் பொதுமக்கள் ஏறி,இறக்க வேண்டிய நிலை உள்ளது. சங்கரலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் அரசு அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்தனர்.

இருந்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் K.T.P. அருண்பாண்டியன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நிற்கமால் சென்ற 2 அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் பிடித்த அரசு பேருந்தை கிழக்கு காவல் நிலைய போலீசார் விடுவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரண்டாவதாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு நின்றிருந்த சிறை பிடித்து வைத்திருந்த அரசு பேருந்து விடுவிக்கப்பட்டது.

அந்தப் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆக்கிரப்பு செய்து கறிக்கடை வைத்திருப்பதால் பேருந்து நிறுத்துவதில் சிரமம் இருப்பதாகவும், அந்த ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் R. காமராஜ், K.பிரேம்குமார், மாரிமுத்து,மாவட்ட பொது செயலாளர்கள் S.சண்முகராஜா, சிவப்பிரகாசம், INTUC ராஜாசேகரன், மாவட்ட செயலாளர் துரை ராஜ் Pcc உறுப்பினர் உமாசங்கர், மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ்,நகர நிர்வாகிகள் முருகேசன், பங்காரு சாமி,முத்து ராமலிங்கம்,பழனி சாமி,TG முருகன், வீராங்கன், சவரிராஜன்,பொன்னுசாமி, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts