
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை பகுதியில் உள்ள உயர் மின் கோபுர விளக்குகள் அதிக அளவு எரிவதில்லை. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சாந்தி சிலை, பூ மார்க்கெட், கலைக் கல்லூரி,புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உயர்மின் கோபுர விளக்கு இருந்தும் பயனில்லை. அதே போல் வால்பாறை வட்டார பகுதிகளில் வாட்டர் பால், பழைய காடு, வில்லோனி மேல் பிரிவு, மாணிக்க என் சி மற்றும் இதர எஸ்டேட் பகுதிகளில் முருகாலி தாய்மொழி எம்டி டிவிஷன் பகுதிகள், சமாதானபுரம் சிங்கோன பகுதிகளில் அதிகளவு மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புகார்கள் தெரிவித்தும் வால்பாறை மின்விளக்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களிடம் கேட்டப் பொழுது பொள்ளாச்சியில் உள்ள காண்ட்ராக்ட் குத்தகைக்காரர் இடம் புகார் அளித்தால் மட்டும் பயன் அளிப்பார்கள் என சொல்கிறார்கள்.
பகலிலே உலா வரும் சிறுத்தை கூட்டங்கள் உள்ள வால்பாறை நடுமலை எஸ்டேட் பகுதியில் மின்விளக்குகள் அதிக அளவு எரிவதில்லை. இது போன்ற மின்விளக்கு எரியாத பகுதிகளில் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.











