
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்திட வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் இரத்ததானக்கழக அறக்கட்டளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆர்ப்பாட்டத்திற்கு அறக்கட்டளை நிறுவனத்தலைவர் மா.காளிதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனையின் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் மற்றும் தண்ணீர் வசதி தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான மருத்துவம் இரத்தப் பரிசோதனை, ஸ்கேன் உட்பட்ட சேவைகள் பிரசவ வார்டிலேயே அமைத்து தரவேண்டும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அரசு காப்பீட்டு ஊழலை தடுத்து நிறுத்தவேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழ்ரசன், INTUC ராஜசேகரன், மகேந்திரன்,மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத் தலைவர் செல்லத்துரை என்ற செல்வம், நாம் தமிழர் கட்சி பாண்டி, தமிழ்பேரரசு கட்சி இசக்கி, மற்றும் இரத்ததான கழக நிர்வாகிகள் வேல்முருகன், லட்சுமணன், வேலுச்சாமி, கபதியோன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, காளிராஜ் மற்றும் திரளான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.











