கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் விவசாயம் குறித்து விழிப்புணர்வு பாடல்!!

கந்தர்வக்கோட்டை அக் 10

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கட்சிப்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தக்கூடிய எட்டாவது புத்தகத் திருவிழா அதற்கான கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயம் குறித்த விழிப்புணர்வு பாடல்களை மாணவ மாணவிகள் பாடினார்கள். சுற்றுச்சூழலை மேம்படுத்தக்கூடிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்கள். உழவு இல்லையெனில் உணவு இல்லை உணவை அனைவரும் வீணடிக்காமல் பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் விவசாயம் குறித்து விழிப்புணர்வு பாடல்.

கந்தர்வக்கோட்டை அக் 10
புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக்கூடிய எட்டாவது புத்தகத் திருவிழாவிற்கான கலை நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விவசாயம் குறித்த விழிப்புணர்வு பாடல்களை பாடினார்கள். உழவு இல்லையெனில் உணவு இல்லை உணவை அனைவரும் வீணடிக்காமல் பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விவசாயிகள் ஏர்பிடித்து, நாற்று நட்டு, களை பறித்து, கதிர் அறுத்து விவசாய்ம் செய்வர். அப்படி தன்னை வருத்திக்கொண்டு உழவு தொழில் செய்து இவ்வுலகிற்கே உணவு படைப்பார்கள். அப்படிப்பட்ட விவசாயத்தையும், விவசாயிகளையம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல்களை பாடினார்கள்.
சிறப்பாக பாடிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை புத்தகத் திருவிழா சிறப்பு விருந்தினர்கள் பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், பாடல் ஆசிரியர் சினேகன், முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் வீரமுத்து, முத்துக்குமார் உள்ளிட்டோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள் மணிமேகலை, ரகமதுல்லா, நிவின், வெள்ளைச்சாமி, செல்விஜாய், ஜென்ம ராகினி சகாய ஹில்டா, மழழையர் ஆசிரியை கௌரி, கணினி உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts