தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட அயன் பொம்மையாபுரம் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்று பேசினார்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  (11.10.2025), கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு காணொலிக் காட்சி வாயிலாக உறையாற்றியதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியம் அயன்பொம்மையாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது : இக்கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக இந்த ஊராட்சியில் 2 குக்கிராமங்களும், 6 வார்டுகள் உள்ளது. கண்மாயில் கழிவு நீர் கலத்தல், கூடுதலாக எரிமேடை மற்றும் சுடுகாட்டிற்கு சாலை வசதி அமைத்து தருதல், பொது கழிப்பிட வசதியில் தண்ணீர் வசதி, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட தேவைகள் மற்றம் கருத்துகள் குறித்து பொதுமக்கள் எடுத்துரைத்தனர்.

சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொது சொத்துகளின் பெயர்களை நீக்குதல் குறித்து எடுத்துரைத்தல் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த காலகட்டத்தில் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலனி என்ற பெயரை முழுமையாக நீக்க வேண்டும், சாதிப் பெயர்கள் தவிர்த்து பொது பெயர்களாக அதற்காக பட்டியலிடப்பட்டுள்ள பெயர்களை அந்த குறிப்பிட்ட ஊர் மற்றும் தெருவைச் சார்ந்தவர்கள் விரைவில் கலந்து ஆலோசனை செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரை அரசுக்கு கோரிக்கை செய்து விரைவில் மாற்றுவதற்கு தீர்மானிக்கலாம்.

2021 -2025 வரையிலான காலகட்டத்தில் நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.3 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் அயன்பொம்மையாபுரத்தில் உள்ள கம்யூனிட்டரி சானிட்டரி காம்ப்ளக்ஸிலிருந்து தர்மராஜ் என்பவர் வீடு வரை உள்ள சாலை பேவர் ப்ளாக்கு சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். ரூ. 3 இலட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் பகுதியில் குடிநீர் இணைப்பு பணிகள் செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளது.

அயன்பொம்மையாபுரம் ஊராட்சியில் 48 மீட்டருக்கு ரூ. 1 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி செய்யப்பட்டுள்ளது. ரூ. 2 இலட்சம் செலவில் குப்பைகளை உரமாக மாற்றும் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 50 ஆயிரம் செலவில் மண்புழு உரம் தயாரிப்பதற்கான கூடம் அமைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. இசக்கி அம்மன் கோவில் பகுதியிலிருந்து சாய்பாபா கோவில் வரையுள்ள பகுதியில் ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சேதுராமன் என்பவரது வீட்டிலிருந்து 93 மீட்டர் நீளத்திற்கு ரூ.4 இலட்சம் செலவில் பேவர் ப்ளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பனையடிபட்டி கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு ரூ. 13 ஆயிரத்து 800 மதிப்பில் வேலி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேக் கிராமத்தில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிக்கு வேலி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அயன்பொம்மையாபுரம் ஊராட்சியில் உள்ள நூலகம் மறுசீரமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் 4 முக்கிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் அயன்பொமையாபுரம் ஊராட்சியில் 222 மீட்டர் தொலைவில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளும், பரஞ்ஜோதி டீகடையிலிருந்து காளியம்மன் கோவில் தெரு வரை ரூ. 6 இலட்சத்து 73 ஆயிரம் செலவில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. அயன்பொம்மையாபுரம் ஊராட்சியில் ரூ.17 இலட்சம் செலவில் அங்கன்வாடி மையம் புதியதாக கட்டுவதற்கு இத்திட்டத்தின் கீழ் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 8 பணிகள் எடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2023 – 24 ஆம் நிதியாண்டில் நடைபெற்று வருகின்ற ஒரு பணியை விரைவில் முடிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பனையடிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகளை ரூ.20 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 1 பணி எடுக்கப்பட்டுள்ளது. அயன்பொம்மையாபுரம் ஊராட்சியின் பேருந்து நிறுத்தம் அருகில் ரூ.5 இலட்சத்து 80 ஆயிரம் செலவில் உயர் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். https://youtube.com/@nalaiyavaralaru?si=Jeci6K443ifBzts7

15வது நிதிக்குழு மானியத்தின் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து அயன்பொம்மையாபுரம் மேல் மற்றும் கீழ தெரு இடையில் ரூ. 3 இலட்சம் செலவில் குழாய் இணைப்பு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், சமுதாய கூடம் கட்டி தருதல் உள்ளிட்ட 8 முக்கியமான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கிய பயன்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா பகுதிகளையும் முழுமையாக ஆய்வு செய்து, நிதிகளை எல்லாம் சம அளவில் பயன்படுத்துவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

சுய உதவிக்குழுக்களுக்கு அனைத்து கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆடு மாடுகள் வளர்ப்புக்கான சிறப்பு வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் பயன் பெற வேண்டும். பொதுமக்கள் தெரிவித்த ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் எல்லாப் பகுதிகளின் கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றுவதற்கு அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.

முன்னதாக, இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வரவு செலவு மற்றும் பணி முன்னேற்ற அறிக்கை குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி முன்னேற்ற அறிக்கை குறித்தும், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் குறித்தும், அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரும் இல்லை. என்பது குறித்தும், தாயுமனவர் திட்ட கணக்கெடுப்பு மற்றும் மக்கள் நிலை ஆய்வு குறித்தும், கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம் குறித்தும், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் (RSETI) வாயிலாக வழங்கப்படும் சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு தகுதியான இளைஞர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்தல், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா (PMAGY) திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் இன்றையதினம் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் அனைவரும் HIV ஏய்ட்ஸ் தொடர்பான உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts