\
கோவை வெள்ளியங்கிரி கோயிலை ஒட்டி சுற்றித் திரிந்த சாந்தமான யானையின் திடீர் உயிரிழப்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பிரேதப் பரிசோதனை விவரங்களும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம், விஷம் அல்லது வேட்டையாடலா என்ற கேள்விக்கு விடை எங்கே என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மிகவும் பரிச்சயமான அமைதியான யானையின் திடீர் மரணம் யாருக்கும் தெரியாமல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பிரேதப் பரிசோதனை. மரணத்திற்கான உண்மையான காரணம் (மின்சாரம், விஷம், வேட்டையாடல்) குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாமை இதனால் சந்தேகம் எழுகிறது.
மேலும் இந்த யானையின் மரணம் குறித்த முழுமையான உண்மை விவரங்களையும், பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் தமிழக வனத்துறை உடனடியாக வெளியிட வேண்டும்.
இது போன்ற சம்பவங்களை சாதாரணமாகக் கடந்து செல்லாமல் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
கேரளாவில் நடப்பது போன்ற வன உயிர்கள் மீதான தாக்குதல்கள் தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கக் கூடாது. யானைகளின் எண்ணிக்கையில் உயர்வு எனக் கூறும் அரசு ஆண்டுதோறும் எத்தனை யானைகள் உயிரிழக்கின்றன? எப்படி இறக்கின்றன? என்ற விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
மனிதர்களுக்கும் வன உயிர்களுக்கும் இடையேயான மோதல்களைத் தடுக்கவும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு மற்றும் வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.











