
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54வது துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54வது துவக்க விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியசக்தி ராமச்சந்திரன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் பால்ராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ் விளாத்திகுளம் அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் கோவில்பட்டி மகளிர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுச்சாமி ஆதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனம் செய்யன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் மோகன் புதூர் அதிமுக நகரச் செயலாளர் ஆண்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் பிரியா மகளிர் அணி நிர்வாகி சாந்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜ் கலந்து கொண்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முன்பு சிறப்புரையாற்றினார் இவர் பேசுகையில் பெண்களிலேயே தகுதி உள்ள பெண்கள் தகுதி இல்லாத பெண்கள் என பிரித்த ஆட்சி இந்த ஆட்சி இப்போது தேர்தல் வருகிறது என்றவுடன் கணக்கெடுப்பு நடத்துகிறார்கள் அவர்கள் மகளிர் உரிமைத் தொகை 1500 தருவதாக கூறி இருக்கிறார்கள் நாங்கள் சொல்கிறோம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்தால் ரூபாய் 2000 தருகிறோம் இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் விளாத்திகுளத்தில் அண்ணா திமுகவை ஜெயிப்பதற்கு எவனாலும் முடியாது அதிமுக ஆட்சி வந்தவுடன் திமுகவால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் அதேபோல் திமுக ஆட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை சரிவர செயல்படுத்தவில்லை என விமர்சித்து பேசினார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பூத்துக் குலுங்கும் மரமாக மக்களின் பசியை தீர்க்கும் கனியாக எப்பொழுதும் விளங்கும் என பேசினார். இக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.





