
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மோதிராபுரத்தைச் சேர்ந்த இளைஞர் தனசேகர் (24) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்த தனசேகர் (24) என்பவர் இருசக்கர வாகனத்தில் அம்பராம்பாளையம் வழியாகச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த தனசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆனைமலை போலீஸார் தனசேகரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.








