
கோவை: பிளாஸ்டிக் பை இல்லா தினத்தை முன்னிட்டு ரேஸ்கோர்ஸில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சமூக விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பிளாஸ்டிக் பை இல்லா தினத்தை முன்னிட்டு, ஆவரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சார்பில், ரேஸ் கோர்ஸ் பகுதியில் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடக நிகழ்ச்சி, பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் ஆவரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் டாக்டர் டயானா மற்றும் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் பொது தொடர்புத் துறை பொது மேலாளர் டாக்டர் பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் வீதிநாடகத்தை அரங்கேற்றினர்.
தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் பகுதியில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
மேலும், இதில் பங்கேற்ற மாணவர்கள் பொதுமக்களுக்கு காகிதப் பைகள் மற்றும் துணிப் பைகளை வழங்கி, அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பைகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.









