பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழப்பு!!

திருச்சி மாவட்டம் மனச்சநல்லூர் பகுதியில் இருந்து ஆறு பேர் கொண்ட இளைஞர்கள் 3 இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றி பார்க்க வந்தனர். ரமேஷ் (22) பூபாலன் (22) இருவரும் ஒரு வாகனத்தில் வரும் வழியில் ஐயர் பாடி சின்ன ஆஸ்பத்திரி அருகாமையில் உள்ள வளைவில் வாகனம் நிலை தடுமாறி மேல் சாலையில் இருந்து கீழே எஸ்டேட் தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 108 வாகனத்தில் வரவழைத்து அவரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இடத்தில் நான்கு நண்பர்கள் கண் முன்னே ஒருவர் துடிதுடித்து இறந்தனர். இன்னொருவர் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்தனர்.

இதனால் நான்கு நண்பர்கள், அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் இறப்புகளை பார்த்து மிகுந்த சோகத்தில் மூழ்கினார்கள் இது போன்ற வளைவுகளில் வரும் பொழுது வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பாக வரவேண்டும், அதிகளவு விபத்துக்கள் ஏற்படும் பகுதியாக அந்தப் பகுதி மாற்றப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தடுப்புச் சுவர் பாதி இடங்களில் அமைக்காமல் இருக்கின்றனர்.  சாலை அமைப்பு அதிகாரிகள் கண்டுகொண்டு நடவடிக்கை எடுப்பது இல்லை என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற விபத்துக்கள் நடக்கும் பகுதியில் பெயர் பலகை மற்றும் தடுப்புச் சுவர்கள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts