வால்பாறை ஈட்டியார் எஸ்டேட்டில் 10 நாட்களாக எரியாத தெருவிளக்குகள் வனவிலங்கு அச்சத்தில் மக்கள் – சிபிஎம் கோரிக்கை!!

வால்பாறை ஈட்டியார் எஸ்டேட் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியாததால் அப்பகுதி மக்கள் வனவிலங்குகளின் அச்சுறுத்தலால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈட்டியார் எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் பழுதடைந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் சிறுத்தை, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இரவு நேரங்களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் பல வழிகளில் வீணடிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அக்கட்சியினர் இனியாவது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சொல்வதை உள்ளூர் அதிகாரிகள் செயலில் கொண்டு வர வேண்டும் என்றும் போர்க்கால அடிப்படையில் அங்கு தெருவிளக்குகளைப் பழுதுநீக்கி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-வால்பாறை P.பரமசிவம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts