மருத்துவக் குறியீட்டுப் பயிற்சிக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா!!

கோவை: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கும் சமூகப் பொறுப்பாக வெற்றி திட்டம் கோவையில் முதன் முறையாக துவக்கம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மருத்துவக் குறியீட்டுத் துறையில் (Medical Coding) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித்தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,(Thought Flows Medical Coding Academy)
தாட் ஃப்ளோஸ் மெடிக்கல் கோடிங் அகாடமி சார்பில் ‘வெற்றி 108’ என்ற சமூக அக்கறை திட்டம் துவக்க விழா கோவையில் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தாலும் திறமையும் ஆர்வமும் கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டு, மருத்துவக் குறியீட்டுப் பயிற்சிக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதை அடிப்படையாக கொண்டு கோவையில் முதன் முறையாக நடைபெற்ற வெற்றி திட்டத்தை கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீகிரி பிரசாத் துவக்கி வைத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பானுமதி, நிர்வாக இயக்குநர் பாலமுரளி ஆகியோர் பேசுகையில், தமிழகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தாலும் திறமையும் ஆர்வமும் கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டு, மருத்துவக் குறியீட்டுப் பயிற்சிக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதே ‘வெற்றி 108’ திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்.

மேலும், மருத்துவக் குறியீட்டுத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், சர்வதேச அளவிலான தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினர்.

தேர்வு, கல்வித் தகுதி, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் பொருளாதார நிலை உள்ளிட்ட வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும், இந்த முயற்சி மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கும் சமூகப் பொறுப்பை நிறுவனம் ஏற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், தொழில்துறை வல்லுநர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts