
சமூக நீதியின் பிறப்பிடம் என்றும் சமூகநீதியின் தொட்டில் என்றும் போற்றப்படுவது தமிழ்நாடு தான் சமூகநீதீயில் இந்தியாவுக்கே வழிகாட்டி மாநிலம் தமிழ்நாடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு காரணம் தமிழ்நாடு தான் என்ற பெருமை உண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் உயிர் மூச்சுக் கொள்கை சமூக நீதீ தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து சமூக நீதிக்காக பல சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தும் வாதாடி வருகிறது. சமூக நீதிக்கு அடிப்படை சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் அனைத்து சாதியினருக்கும் உரிய இடப்பங்கீடு கிடைக்கும் அதிலும் ஒவ்வொரு சாதியிலும் நலிந்த பிரிவினர் மேம்படுவதற்கு அரசு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி சமூக சமத்துவ நிலைக்கு கொண்டு வர இயலும் நலிந்த பிரிவினர் முன்னேறாமல் நாட்டில் சமத்துவ நிலை காணப்படாது.
எனவே சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராமதாஸ் அவர்கள் 1980 முதல் இன்று வரை குரல் கொடுத்தும் போராடியும் வருகிறோம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ளது எடுத்துக்காட்டாக கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா பீகார் ஒடிசா போன்ற மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது அப்படி இருக்க தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இயலாது மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று தட்டிக் கேட்க கூடாது அதோடு தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கும் தீர்வாக அமையும் எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாட்டின் அதிக பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட ஜாதி வன்னியர்கள் ஆனால் வன்னியர்கள் கல்வி வேலை வாய்ப்பு மிக மிக பின்தங்கி உள்ளனர் நீண்ட காலமாக ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு 12 வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி விகிதத்தில் கடைசியில் உள்ள மாவட்டங்கள் வன்னியர் வாழும் வட மாவட்டங்கள் தான் என்பதை நிரூபிக்கிறது அரசு வேலைவாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு கிடைத்துள்ள பங்கீடு மிகவும் குறைவு குடிசை வீடுகளில் அதிக எண்ணிக்கையில் வாழ்பவர்கள் தனிநபர் வருமானம் உள்ளிட்ட வாழ்வியலில் மிகவும் பின்தங்கியவர்கள் வன்னியர்கள் என்பதை அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன அதிக பெரும்பான்மைமக்கள் தொகையை கொண்ட வன்னியர்கள் முன்னேறாமல் தமிழ்நாடு எப்படி முன்னேறிய மாநிலமாக கருத முடியும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியும் இன்றுவரை நடைமுறைப்படுத்தாதது மிகுந்த வேதனையும் வருத்தமும் அளிப்பதோடு கைக்கு எட்டியது வாய் கேட்கவில்லையே கானல் நீர் ஆகிவிட்டது என்ற நிலையில் இது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.
வன்னியர் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியின் அங்கம் தான் எனவே வன்னியர் 10.5% தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 364 சாதியினரும் முன்னேற வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் குறிக்கோளும் ஆகும் ஒவ்வொரு சாதிகளும் நலிந்த பிரிவினர் உள்ளனர் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்குரிய இட ஒதுக்கீடு அளிப்பதோடு ஒவ்வொரு சாதிகளும் உள்ள நலிந்த பிரிவினரை கண்டறிந்து மேம்படுத்துவதற்கான சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் அப்போதுதான் தமிழ்நாட்டில் எல்லோரும் முன்னேறிய சமூக நிலை காணப்படும் எனவே 12 12 2025 அன்று தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்ட அறப்போராட்டத்தில் மிக முக்கிய கோரிக்கைகளான சமூக நீதியின் அடித்தளமான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திடவும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடுசட்டமாக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருப்பதை உடனடியாக நிறைவேற்றவும் அனைத்து சாதியினரும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டி வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினார்கள் மனுவை ஏற்று தமிழக அரசுக்கு அனுப்பி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மனுவில் மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் ராம முத்துக்குமார், மாநில தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் கு ம வேல் வேந்தன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் அயன் சின்னத்துரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் உமரி நெப்போலியன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள் தூத்துக்குடி மத்திய மாவட்ட அமைப்பு செயலாளர் பாலசுப்ரமணியன்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக செய்தியாளர்,
–பரணி பாலா.











