பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி நடைபெற்றது!!

கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி நடைபெற்றது.
பாரதியாரின் முக கவசம் அணிந்து கொண்டாட்டம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் பாரதியார் பிறந்த தினம் முன்னிட்டு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். மாணவ மாணவிகள் பாரதியாரின் பற்றி சிறப்பாக பேசினார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவ கோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமத்துல்லா பாரதியார் பிறந்த தினம் குறித்து பேசும் பொழுது மகாகவி பாரதியார் 1882-ல் எட்டயபுரத்தில் பிறந்தவர். சின்னச்சாமி,லட்சுமி அம்மாள் சிறுவயதிலேயே கவிதை திறன் வெளிப்பட்டது, எட்டயபுரம் அரசவையில் பாராட்டுப் பெற்றார்; இந்தியா, தமிழ்நாடு பத்திரிகைகளில் பணியாற்றினார் விடுதலைப் போராட்ட உணர்வை ஊட்டினார். பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, சுயசரிதை போன்ற பல படைப்புகளைத் தந்தார்; புதுச்சேரியில் வாழ்ந்து, 1921-ல் மறைந்தாலும், காலத்தை வென்ற கவிஞராக தமிழ் மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்தக் கருத்துகளின் குரலாக இன்றும் வாழ்கிறார்.

மகாகவி பாரதியார் ஒரு சிறந்த தமிழ் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார், ‘பாரதி’ பட்டம் பெற்ற இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி, சுதந்திரம், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு பற்றிப் பாடினார், யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனப் போற்றினார், புதுமைப் பெண் என்ற கருத்தை வலியுறுத்தினார், கண்ணன், பாப்பா பாட்டு, குயில் பாட்டு போன்ற பல புகழ்பெற்ற படைப்புகளைத் தந்தார், தனது எழுத்துக்களால் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தார், 39 வயதிலேயே இயற்கை எய்தினார், அவரது கவிதைகள் இன்றும் மக்களால் போற்றப்படுகின்றன.

பாரதியின் முதல் கவிதை தொகுதி கண்ணதாசன் என்ற பெயரில் 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது பாரதியின் கவிதைகளின் முதல் தொகுப்பாகும் மற்றும் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான இடத்தை வகிக்கிறது.

கர்மயோகி இதழின் ஆசிரியர் சுப்பிரமணிய பாரதியார் ஆவார். இது பாண்டிச்சேரியில் இருந்து 1910-ல் வெளிவந்த ஒரு தமிழ் மாத இதழ். பாரதியார் இந்த இதழில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார், இதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கட்டுரைகளும் அடங்கும் என்றும், தமிழ்நாடு அரசு பாரதியின் கவிதையில் வரும் புதுமைப்பெண் என்ற வார்த்தை எடுத்து இளங்கலை பட்டப்படிப்பு அரசு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று பேசினார். மாணவ, மாணவிகள் அனைவரும் பாரதியாரின் முக கவசம் அணிந்து உற்சாகமுடன் பாரதியார் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், செல்விஜாய், வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா கணிப்பொறி உதவியாளர் தையல் நாயகி, மழலையர் ஆசிரியர் கௌரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts