​பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா- மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் மரக்கன்றுகள் வழங்கல்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தமிழ்நாடு ஃபோட்டோ & வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம் சார்பில் முப்பெரும் விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி பொள்ளாச்சி நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விழாவில் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை பிரதிநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார் விழாவில் அவர் பேசுகையில் தமக்கு அளிக்கப்பட்ட கௌரவத்திற்கும் மேடையில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கும் சங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். சங்க உறுப்பினர்களின் ஒற்றுமையும் நேர்த்தியான விழா ஏற்பாடுகளும் பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

விழாவில் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்தாண்டு டைரி மற்றும் காலண்டர்கள் வழங்கப்பட்டன. கல்வியை ஊக்குவிக்கும் விதமாக பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுத் தொகைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவின் சிறப்பம்சமாக கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வெறும் கன்றுகளை வழங்குவதோடு நின்றுவிடாமல் அவற்றை நட்டு கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்புடனான நிபந்தனையையும் சங்கம் முன்வைத்தது. இது இயற்கை பாதுகாப்பில் சங்கத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.

சமூக நலம் கல்வி மேம்பாடு மற்றும் இயற்கை பாதுகாப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஒரு முன்மாதிரி நிகழ்வாக இவ்விழாவை நடத்திய தமிழ்நாடு ஃபோட்டோ & வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்களோடு,

நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts