
கோவை கோவில்பாளையம் சத்தி ரோடு சாலையில் அமைந்துள்ள பாகுலேயா ஃபிட்னஸ் உரிமையாளர் திரு கார்த்திக் அவர்கள் மிகச்சிறந்த முறையில் உடற்பயிற்சி மையம் கோவில்பாளையம் பகுதியில் செயல்படுத்தி வருகிறார்.ஆசியா பவர் லிப்டிங் போட்டியில் கலந்து கொண்டு இந்திய திருநாட்டிற்கு பதக்கங்களை பெற வேண்டும் என்று கடுமையான பயிற்சி எடுத்து இன்று சாதித்து காட்டியுள்ளார். டில்லியில், கடந்த பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நடந்த உலக ராபவர் லிப்டிங் கூட்ட மைப்பு மற்றும் உலக ஸ்போர்ட்ஸ் கட்டமைப்பு சார்பில், ஆசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

அதில் கோவில்பாளையத்தில் ஜிம் நடத்தி வரும் கார்த்திக் போட்டியில் பங்கேற்றார்.
87 கிலோ உடல் எடையில், 180 கிலோ எடையை தூக்கி ரெக்கார்ட் பதித்து முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளா.இதுகுறித்து தங்கம் வென்ற கார்த்திக் தில்லியில் இருந்து கூறுகையில்:-

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நம்முடைய உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பது மாற்று கருத்து கிடையாது. நான் கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பாகுலேயா ஃபிட்னஸ் என்ற உடற்பயிற்சி ஜிம்மை நடத்திக் கொண்டு வருகிறேன் 9360279266 என்னுடைய மாணவர்களுக்கு நான் தினந்தோறும் பலவிதமான உடற்பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து வருகிறேன். என்னுடைய மாணவர்கள் மற்றும் என்னுடைய குடும்பத்தார் எனக்கு அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் எப்படியாவது சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது அதற்காக தினந்தோறும் கடுமையாக உடற்பயிற்சி செய்து மனதளவில் நான் வெற்றி பெறுவேன் என்ற எண்ணங்களை உருவாக்கி இன்று நம்முடைய இந்திய நாட்டிற்கு தங்கப்பதக்கம் வாங்கி பெருமை சேர்த்துள்ளேன் என்று கூறினார் .https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மக்கள் விழுப்புணர்வு அமைப்பின் பொதுச்செயலாளர் M.M. ஹாரூன் அவர்கள் கூறுகையில்;-
திரு கார்த்திக் அவர்கள் தில்லியில் நடைபெற்ற ஆசியா பவர் லிப்டிங் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்துடன் வரும் கார்த்திக் அவர்களுக்கு கோவை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு தர வேண்டும் என்று தீர்மானித்து கோவில்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் பேசி வருகிறோம். இன்று அல்லது நாளை கார்த்திக் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் அவருக்கு உற்சாக வரவேற்பு தருவதற்காக பொதுமக்களாகிய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்கள். இதில் இந்தியா, இலங்கை, நேபாளம் உட்பட பல நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய பலத்தை நிரூபித்துக் காட்டினர்.
-MMH.





