
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

137 பயனாளிகளுக்கு தலா ரூ1,01,800 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.7,000 மதிப்பிலான கமோட் சக்கர நாற்காலிகள்,
மொத்த மதிப்பு 141 பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் மடக்கு சக்கர நாற்காலிகள் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் காதொலிக் கருவிகள், பிரெய்லி கடிகாரங்கள் மற்றும் ரீடர்கள் எனப் பல்வேறு உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவிகள் அவர்களின் அன்றாட வாழ்வை எளிதாக்கவும் பொருளாதார ரீதியாக அவர்களை முன்னேற்றவும் உதவும் எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
உதவிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் தங்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றி உதவிய தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நெகிழ்ச்சியுடன் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஊனம் என்பது உடலில் அல்ல எண்ணத்தில்தான் உள்ளது உங்கள் கைகளில் வழங்கப்பட்டுள்ள இந்த அரசு உதவிகள் வெறும் கருவிகள் அல்ல அவை உங்கள் முன்னேற்றத்திற்கான சிறகுகள். வானமே எல்லை என்று இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்குங்கள். உங்கள் விடாமுயற்சியும் தளராத தன்னம்பிக்கையும் உங்களைச் சமூகத்தின் சிகரத்திற்கு அழைத்துச் செல்லும் உலகம் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதை விட உங்கள் சாதனையைப் பார்த்து வியக்கட்டும்
என்ற சிந்தனையோடு
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணைத் தலைமை நிருபர்
உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்.











