
பொள்ளாச்சி கோடைகால வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பறவைகளின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் ஒரு உன்னத முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை உறுப்பினர்கள் இன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தின் (ATR) கள இயக்குநர் உயர்திரு வெங்கடேஷ் இ.வ.ப. அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.
கோடைகாலத்தில் நீர்நிலைகள் வறண்டு வருவதால் பறவைகள் நீரின்றி தவிப்பதைத் தடுக்க பறவைகளுக்கு கொஞ்சம் தண்ணீர் வைப்போம் என்ற புதிய திட்டத்தை அறக்கட்டளை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அறக்கட்டளை உறுப்பினர்களால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிமெண்ட் தண்ணீர் தொட்டிகள் நகரத்தின் முக்கியப் பகுதிகளில் வைக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தின் தொடக்கமாக இன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரிடம் முதல் தண்ணீர் தொட்டி வழங்கப்பட்டது. வனத்துறையின் வழிகாட்டுதலோடு நகர்ப்புறங்களில் பறவைகள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்தத் தொட்டிகளை வைத்து பராமரிக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர். இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் இந்த முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இயற்கையோடு இணைந்து பயணிக்கும் இயற்கையை நேசி அறக்கட்டளையின் இந்த உன்னதப் பணி மென்மேலும் சிறக்க நமது நாளைய வரலாறு பத்திரிக்கையின் சார்பாக
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.






