
வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதி கோவை மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகும். பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்த மலைப்பிரதேசம் தற்போது சட்டமன்ற உறுப்பினர் இல்லாத நிலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேயிலை மற்றும் காபி தோட்டங்களை வாழ்வாதாரமாகக் கொண்ட இப்பகுதி பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கிய ஒரு தனித் தொகுதியாகும். வால்பாறை நகராட்சி ஆனைமலை பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள எஸ்டேட் கிராமங்கள் இத்தொகுதியின் எல்லைக்குள் வருகின்றன.
இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர் பிற மாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர் மேலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பழங்குடியின மக்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் அன்றாட வாழ்வு பெரும்பாலும் எஸ்டேட் நிர்வாகங்களையே சார்ந்துள்ளது.
வால்பாறை மக்களின் நீண்டகாலத் தேவைகளாகப் பின்வருபவை நீடிக்கின்றன தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதிய உயர்வு மற்றும் போனஸ் விவகாரங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் முதன்மையான பேசுபொருளாகின்றன. சிறுத்தை மற்றும் யானைகளின் ஊடுருவலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு. அவசர சிகிச்சைக்குப் பொள்ளாச்சி அல்லது கோவைக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால், உயர்தர வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கோரிக்கை.
எஸ்டேட் லயன் வீடுகளில் தலைமுறை தலைமுறையாக வசிக்கும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வீட்டுமனைப் பட்டா வழங்குதல்.
தொடக்க காலத்தில் இடதுசாரி இயக்கங்களின் (CPI/CPM) கோட்டையாக விளங்கிய வால்பாறையில் காலப்போக்கில் திராவிடக் கட்சிகள் தடம் பதித்தன. காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளும் இங்கு பலமுறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பின் தற்போது இத்தொகுதி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத் துறையில் வால்பாறை அசுர வளர்ச்சி கண்டு வரும் நிலையில், சுற்றுச்சூழ் சமநிலையைப் பாதுகாத்து, அதே சமயம் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே அடுத்ததாக வரும் மக்கள் பிரதிநிதியின் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.









