
கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி!!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கந்தர்வகோட்டை ஜீன் 12
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை உறுதிமொழி வாசித்தார். உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உலக தினம் என்பது , 2002 ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் நிறுவப்பட்டு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அனுசரிப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
குழந்தைப் பருவம், கல்வி மற்றும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு பிஞ்சு வயதில் வறுமை மற்றும் சட்டவிரோத காரணிகளால் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர், சிறுமிகளை மீட்டெடுக்க இத்தினம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உலக தினத்தின் கருப்பொருள், குழந்தை தொழிலாளர் முறைக்கு சிவப்பு அட்டை, குழந்தைகளுக்கு நியாயமான வாய்ப்பு, பெரியவர்களுக்கு கண்ணியமான வேலை என்பதாகும் . குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது என்று பேசினார்.இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி, செல்விஜாய், ஜெம்ம ராகினி சகாய கில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.











