
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா கக்கன் காலனி பகுதியில் சவரங்காடு செல்லும் பாதையில் உள்ள குடிநீர் பம்பு அருகாமையில் பாலத்தின் அருகில் சிறுத்தைகள் அதிகளவு சுற்றி திரிந்து வருகின்றன. அப்பகுதியில் நாய், கோழி, பூனை இது போன்ற வீட்டு பிராணிகளை வேட்டையாடி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
சிறுத்தைகள் வால்பாறை வட்டார பகுதிகளிலும் டவுன் பகுதிகளிலும் சுற்றி திரிகின்றன. இந்த சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் விட வேண்டும், அப்பகுதியில் குழந்தைகள் பெரியவர்கள் ஏதேனும் அவசரத்திற்கு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனைக் கண்டு வனவிலங்கு அதிகாரிகள் எஸ்டேட் பகுதியில் உள்ள புதர்கள் அகற்றி விட வேண்டும் இதனால் விலங்குகள் பொதுமக்கள் குடியிருப்புக்குள் வராமல் தடுக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பேபி திவ்யக்குமார்.




