
தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் வட்டம்,லெக்கம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில்,ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் கொடை விழா மற்றும் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு,மாபெரும் மூன்றாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பந்தயத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற மார்ட்டின் உரிமையாளர்களுக்கும் ஓட்டி வந்த சாரதிக்கும் பரிசுகள் வழங்கிய கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம் கிளைச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் சாலையில் இருபுறமும் நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.





