
கோவை: தமிழகத்தில் முதல் ப்ரத்யேகமான முழுமையான நெஞ்சுவலி சிகிச்சை மையத்திற்கான சான்றிதழ் பெற்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை சிகிச்சை வழங்கியதால், அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அங்கீகாரம் வழங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உலக அளவில், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகின்ற, அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறக்கட்டளை, கோவையில் செயல்பட்டு வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு, தமிழகத்தில் முதல் காம்பிரஹேன்சிவ் செஸ்ட் பெயின் சென்டர் என்ற சர்வதேச சான்றிதழை வழங்கியுள்ளது. மாரடைப்பு நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை உரிய நேரத்தில் பெறுவதில், ஏற்படும் தாமதங்களை குறைத்து, உடனடி மற்றும் மேம்பட்ட இதய சிகிச்சையை வழங்குவதில் மருத்துவமனை வகித்த முக்கிய பங்கிற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதை வெளியிடும் நிகழ்ச்சி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ எஸ்என்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், எஸ்.என்.ஆர் அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், மற்றும் இதயவியல் துறையின் மூத்த தலைவர்கள், ஆலோசகர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த சான்றிதழை வெளியிட்டனர்.
தமிழகத்தில் 30 முதல் 69 வயது மேற்பட்டவர்களிடையே ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 36 சதவிகிதம் இதய மற்றும் இரத்தநாள நோய்களால் ஏற்படுகின்றது. சமீபத்திய தரவுகளின் படி மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆண்டுதோறும் 12.5 சதவிகிதம், அதிகரித்து வருகின்றது. இதய நோய்களில் அதிகரித்து வரும் பாதிப்பு, குறிப்பாக எஸ்டி பிரிவு உயர்வின் கூடிய மாரடைப்பு எனப்படும் மிகத் தீவிரமான மாரடைப்பு வகைகளுக்கான சிகிச்சையை தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் முதல்முறையாக, இச்சான்றிதழ் பெரும் மருத்துவமனை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எனவும், இந்திய அளவில் இச்சான்றிதழ் பெற்ற மருத்துவமனைகள் ஐந்து மட்டுமே உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.




