
தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் சீரான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குடிநீருக்காக பொதுமக்கள் போராடியது கோடை காலத்தில் குடிதண்ணீர் என்பது 100 சதவீதம் இல்லாமல் பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவியேற்ற 2022ம் ஆண்டுக்குப் பின்பு படிப்படியாக தூத்துக்குடி மாநகரில் குடிதண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது பழைய பைப் லைன் மாற்றப்பட்டு புதிய பைப் லைன் மூலம் தற்போது குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது ஒரு சில வார்டுகளில் தொடர்ந்து குடிதண்ணீர் சரியாக வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனையடுத்து 60 வார்டுகளிலும் சீரான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அதன் அடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட 29 வது வார்டு 39 வது வார்டு பகுதிக்கு சீரான குடிதண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் புகார் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பைப்லைன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு டபிள்யூஜி ரோட்டில் சிவன் கோவில் திரும்பும் கார்னரில் பைப் லைன் பதிக்கப்பட்டு குடிதண்ணீர் சீராக வருகிறதா என்று ஆய்வு செய்தார் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார் இந்தப் பணிகள் முடிவடையும் போது 29வது வார்டு மற்றும் 39வது வார்டு பகுதிகளில் சீரான குடிதண்ணீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார் தற்போது 60 வார்டுகளில் ஒரு சில வார்டுகளை தவிர மற்ற வாடுகளில் எல்லாம் தினசரி குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது அதுவும் கோடை காலத்தில் எந்த விதமான தட்டுப்பாடும் இல்லாமல் குடிதண்ணீர் விநியோகம் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் மேயா் ஜெகன் பொியசாமி மாபெரும் கனவுத் திட்டம் ஒன்று மாநகர மக்களுக்கு அறிவிக்க உள்ளார் இந்த கனவு திட்டம் அறிவிக்கும் போது தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் எவ்வளவு சந்தோசமாக இருப்பாா்கள் அது நடைமுறையில் அமுல்படுத்தி தெரிவிக்கும் போது உற்சாகமடைவார்கள். என்று கூறினாா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளர் ஜான்சன், சுகாதாரக் குழு தலைவா் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன் ராஜாமணி முன்னாள் கவுன்சிலா் பெரியசாமி, முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர் வட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முக மகராஜா போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.




