மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த 12 மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கோரிக்கை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த 12 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டதாக கூறப்படும் மீனவர்களின் விபரம் பிாின்ஸ் ரூபட், அந்தோணி அஜித், ஜால்சன், ாீகன், ஹொ்சன், ப்ாிஸ்மேன், பொியகருப்பன், கிளமன்ட், அந்தோணிரூவிஸ்டன், கபில் ரோச்சா், அந்தோணிபியோ, மோசஸ், மேற்கண்ட 12 மீனவர்களும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், நீண்ட நாட்களாகியும் அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல், இலங்கையில் உள்ள இந்திய தூதரக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தனது உயிரையே பணயம் வைத்து குடும்பத்திற்காக உழைக்கிறார். அவர் வீடு திரும்பாத ஒவ்வொரு நாளும், அவரது குடும்பத்தினருக்கு அது மிகுந்த மனவேதனையாகவும் அச்சமாகவும் மாறுகிறது. விடுதலை செய்யப்பட்ட பின்னரும், அவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் இருப்பது அந்த 12 குடும்பங்களையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்ற கவலையில் தவித்து வருகின்றனர். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இந்த விவகாரத்தை மிகுந்த கவனத்துடனும் மனிதநேயத்துடனும் எடுத்துக்கொண்டு, போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், தமிழக முதலமைச்சர் விஜய், மத்திய அரசு, இந்திய வெளியுறவுத்துறை, இந்திய தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த 12 மீனவர்களும் பாதுகாப்பாக தமிழகம் திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மீனவர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு, இந்த குடும்பங்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்த்த இந்த 12 மீனவர்களையும் உடனடியாக தாயகம் திரும்பச் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts