
கோவை மாவட்டம் பொள்ளாச்சி
வால்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் பரமசிவம் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க (DYFI) நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக மணிகண்டன், செயலாளராக அகமது பாவா, பொருளாளராக தனுஷ் குமார் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்
தலைமுறை தலைமுறையாக வீடு இல்லாமல் பணி ஓய்வுக்குப் பின் வாழ்வாதாரத்தை இழக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்க வேண்டும்.
வால்பாறை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவமனையிலேயே அனைத்து உயர்தர சிகிச்சைகளும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
படித்த இளைஞர்களுக்குத் தேயிலை அல்லாத மாற்றுத் தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இக்கோரிக்கைகள் பல வருடங்களாகத் தீர்க்கப்படாத எதார்த்தமான உண்மையாகும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உழைக்கும் மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என்று வால்பாறை மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-STAR M. சுரேஷ்குமார்.





