
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் பரமசிவம் முன்னிலையில் தங்களை அச்சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தங்களுக்குப் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் சிரமங்களை அரசு அதிகாரிகளிடம் பேசி எந்தவித எதிர்பார்ப்புமின்றி சுமுகமாகத் தீர்த்து வைத்ததற்காக அவருக்கு ஊழியர்கள் தங்களது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இது குறித்து சத்துணவு ஊழியர்கள் கூறுகையில்
நாங்கள் வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாதிப்புகளையும் குறைகளையும் அவரிடம் கூறினால் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சுமுகமான முறையில் தீர்த்து வைப்பார்.
எங்கள் பிரச்சினைகளில் தேவையற்ற சம்பந்தமில்லாத நபர்கள் தலையிடுவதால் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே எங்களுடைய பணி உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவே நாங்கள் சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்கத்தில் இணைந்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
உங்கள் STAR M. சுரேஷ்குமார்





