.
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை (ஆக 10) முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாள் இரண்டாவது சுற்றை முன்னிட்டு அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
நிகழ்வினை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அக்கச்சிப்பட்டி கிராம சுகாதார செவிலியர் சொர்ண தர்ஷினி மாத்திரை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார். இந்நிகழ்வில் அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் பள்ளியின் மருத்துவர் தூதர் தேசிய குடற்புழு நீக்கம் தினம் குறித்து பேசும்பொழுது
குடற்புழு நீக்கம் என்பது மனிதர்களின், குறிப்பாக குழந்தைகளின் குடலில் தங்கி வாழும் ஒட்டுண்ணிப் புழுக்களை (கொக்கிப்புழு, உருளைப்புழு போன்றவை) பாதுகாப்பான மருந்துகளின் மூலம் அழித்து வெளியேற்றும் முறையாகும். இந்திய அரசு வருடத்திற்கு இரண்டு முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் 10) தேசிய குடற்புழு நீக்க தினமாக அனுசரித்து, அல்பெண்டசோல் மாத்திரைகளை இலவசமாக வழங்கி வருகிறது.
சமூகத்தில் அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும் இது மிகவும் அவசியமான ஒன்றாகும்
குடற்புழு நீக்கத்தின் முக்கியத்துவம்
மாணவர்களின் உடல் மற்றும் அறிவுசார் வளர்ச்சியில் குடற்புழு நீக்கம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஊட்டச்சத்து உறிஞ்சுதல்
குடலில் உள்ள புழுக்கள் குழந்தைகள் உட்கொள்ளும் உணவில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடுகின்றன. குடற்புழு நீக்கம் செய்வதன் மூலம், உணவின் சத்துக்கள் முழுமையாக உடலைச் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.
கற்றல் திறன் மேம்பாடு
குடற்புழுத் தொற்றால் ஏற்படும் இரத்த சோகை மற்றும் உடல் சோர்வு நீங்குவதால், வகுப்பறையில் மாணவர்களின் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது. இது அவர்களின் கவனச் சிதறலைத் தடுத்து, கற்றல் இடைவெளிகளைப் போக்க பெரிதும் உதவுகிறது.
மாணவ மாணவிகள் அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரையை கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று பேசினார். ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி ,செல்விஜாய் உள்ளிட்டோர் மாணவ மாணவிகளுக்கு மாத்திரை வழங்கினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.






