இலவச கண் சிகிச்சை முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்!!

தூத்துக்குடி மாவட்டம் படர்ந்தபுளி கிராமத்தில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடம்பூர் அருண் ராஜா அறிவுறுத்தலின்படி நடத்தப்பட்ட இக்கண் சிகிச்சை முகாமில் பல்வேறு தரப்பு மக்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மருத்துவர் ஷேக் அப்துல்லா தலைமையிலான மருத்துவக் குழுவினர் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குக் கண் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

பரிசோதனையின் முடிவில் தீவிர கண் பாதிப்பு கண்டறியப்பட்ட 5-க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சிகிச்சைக்காகத் பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் வீ த லீடர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் அஸ்வின், காட்டுராஜா, அருணாச்சலம், வெங்கடேஷ், பொன்ராஜ், சுப்புராம், சரண்ராஜ், சுபாஷ் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts